/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மரில் பிஎச்.டி., படிப்பு விண்ணப்பிக்க அறிவிப்பு
/
ஜிப்மரில் பிஎச்.டி., படிப்பு விண்ணப்பிக்க அறிவிப்பு
ஜிப்மரில் பிஎச்.டி., படிப்பு விண்ணப்பிக்க அறிவிப்பு
ஜிப்மரில் பிஎச்.டி., படிப்பு விண்ணப்பிக்க அறிவிப்பு
ADDED : அக் 08, 2024 09:21 PM
புதுச்சேரி:ஜிப்மரில், பிஎச்.டி., படிப்புகளிர் சேர, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி டீன் அலுவலக செய்திகுறிப்பு:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், பிஎச்.டி., படிப்பில் உயிர் வேதியியல் 3, மருத்துவ புற்றுநோயியல் 1, மகப்பேறியல் 1, என 5 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், ஆண்டுதோறும் ஆன்லைன் நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
2024ம் ஆண்டு பிஎச்.டி., படிப்புக்கான சேர்க்கைக்கு, ஆன்லைனில் வரும் 15ம் தேதி மாலை 4:30 மணி வரை, www.jipmer.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை, 19ம் தேதி முதல், 23ம் தேதி வரை, ஜிப்மர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுத்தேர்வு ஆன்லைனில் வரும் 23ம் தேதி மதியம் 2:00 மணி முதல் 3:30 மணி வரை நடக்கிறது.
இந்த தேர்வு முடிவுடன், தற்காலிக தகுதி பட்டியல், நவ., 7ம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும். நுழைத்தேர்வு மற்றும் சேர்க்கை தொடர்பாக சந்தேகங்களுக்கு, 0413 2298288, 2296106 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.