/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரபல ரவுடி மிரட்டல் வியாபாரிகள் எதிர்ப்பு
/
பிரபல ரவுடி மிரட்டல் வியாபாரிகள் எதிர்ப்பு
ADDED : நவ 12, 2024 12:09 AM

புதுச்சேரி: புதுச்சேரி, கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை எதிரில் உழவர் கரை நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் பிரபல ரவுடி ராமு ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து, வியாபாரிகள் போலீசில் புகார் தெரிவித்தனர்.
வணிகர்கள் கூட்டமைப்பு தலைவரான சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கர், இது தொடர்பாக உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் மூலம் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்தார். இதை அறிந்த ரவுடி ராமு, எம்.எல்.ஏ., சிவசங்கரின் அலுவலகத்திற்கு சென்று, மிரட்டல் விடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து ரவுடி ராமுவை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று, சிவசங்கர் எம்.எல்.ஏ., தலைமையில் ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து பைக்கில் பேரணியாக சட்டசபைக்கு சென்றனர். கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், டி.ஜி.பி., ஷாலினி சிங் ஆகியோரை சந்தித்து, ரவுடியை கைது செய்து, வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்தனர்.
இதை தொடர்ந்து, சிவசங்கர் எம்.எல்.ஏ.,வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.