/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு 6 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கியுள்ளது பா.ஜ., தலைவர் ராமலிங்கம் தகவல்

ADDED : செப் 02, 2025 03:24 AM
புதுச்சேரி: புதுச்சேரி என்.ஆர்.காங்., -பா.ஜ., அரசு 6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது என பா.ஜ., தலைவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி குறித்து அவதுாறாக பேசிய ராகுலை கண்டித்து புதுச்சேரியில் நடந்த பேரணியில் பா.ஜ., மாநிலத் தலைவர் ராமலிங்கம் பேசியதாவது: ,
பிரதமர் மோடி பதவியேற்றபோது, உலகளவில், இந்தியா பொருளாதரத்தில், 10வது இடத்தில் இருந்தது. தற்போது, 4வது இடத்தில் உள்ளது.
பா.ஜ., கூட்டணியில் உள்ள என்.ஆர். காங்., ஆட்சியில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு, முதல்வர் ரங்கசாமி வேலை வாய்ப்பை வழங்கியுள்ளார்.
புதுச்சேரியில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 7 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2014 வரை, எங்கு பார்ததாலும், குண்டு வெடிப்பு, கலவரம் என இருந்தது. பிரதமர் மோடி பதவியேற்ற பின் நாடு அமைதியாக இருந்து வருகிறது.
இந்தியாவில், 19 மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. அப்துல் கலாமை, ஜனாதிபதியாக ஆக்கியது பா.ஜ, கட்சி தான். தற்போது துணை ஜனாதிபதி வேட்பளராக, தமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனை நிறுத்தியுள்ளது.வரும் 20௨6ம் ஆண்டில் நடக்க உள்ள, சட்டசபை தேர்லில், புதுச்சேரியில், பா.ஜா., என்.ஆர்., கூட்டணி அமைத்து அமோகமாக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.