/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணி இடங்கள்... இன்று முடிவு!அமித் ஷாவை சந்திக்கிறார் ரங்கசாமி
/
என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணி இடங்கள்... இன்று முடிவு!அமித் ஷாவை சந்திக்கிறார் ரங்கசாமி
என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணி இடங்கள்... இன்று முடிவு!அமித் ஷாவை சந்திக்கிறார் ரங்கசாமி
என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணி இடங்கள்... இன்று முடிவு!அமித் ஷாவை சந்திக்கிறார் ரங்கசாமி
ADDED : பிப் 14, 2026 04:23 AM

புதுச்சேரி: இன்று காரைக்கால் வரும் மத்திய உள்துறை அமைச்சரை, முதல்வர் ரங்கசாமி சந்தித்துகூட்டணி சீட்டுகள் விவகாரத்தினை இறுதி செய்கிறார். புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி வரும் சட்டசபை தேர்தலிலும் தொடர்வதை, முதல்வர் ரங்கசாமியிடம் போனில் பேசி, மத்திய உள்துறை துறை அமைச்சர் அமித் ஷா உறுதி செய்தார். அடுத்து முதல்வர் ரங்கசாமி எடுத்து வைத்த நிர்வாக சிக்கல்களையும் சரி செய்து, அடுத்தடுத்து நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.
காரைக்காலுக்கு இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் நிலையில், புதுச்சேரி பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா நேற்று திடீரென முதல்வர் ரங்கசாமியை வீட்டில் தனியாக சந்தித்து பேசினார். 30 நிமிடம் நடந்த இந்த சந்திப்பில் என்.ஆர்.காங்., கூட்டணி தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.
அதை தொடர்ந்து இன்று காரைக்கால் செல்லும் முதல்வர் ரங்கசாமி, அமித்ஷாவை நேரில் சந்தித்து கூட்டணி இடங்கள் தொடர்பாக இறுதி செய்கிறார்.
எல்லாமே ஜக்குக்கு... கடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., 16 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளான பா.ஜ., 9, அ.தி.மு.க., 5 தொகுதிகளில் போட்டியிட்டன.
வரும் சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்., 16 தொகுதிகளில் போட்டியிடுவோம்; இதில் குறைத்து கொள்ள முடியாது என, திட்டவட்டமாக பா.ஜ.,விடம் தெரிவித்துவிட்டது. அதேபோல் சிட்டிங் எம்.எல்.ஏ., சீட்டுகள் அப்படியே என்.ஆர்.காங்., கேட்கிறது.
தாமரையின் பலே திட்டம் மறுபக்கம், பா.ஜ., கடந்த முறை நின்ற 9 தொகுதிகளை காட்டிலும் இம்முறை கூடுதலாக தேர்தலில் நிற்க காய் நகர்த்தி வருகிறது. குறிப்பாக, அ.தி.மு.க., விற்கு 2 தொகுதிகளை கொடுத்துவிட்டு, புதிதாக மலர்ந்து கூட்டணியில் இணைந்த ல.ஜ.க., விற்கு 2 தொகுதிகளை விட்டு கொடுத்து மீதமுள்ள 10 தொகுதிகளை நிற்க முடிவு செய்து, அதற்கான பேச்சுவார்த்தைகளை முடுக்கிவிட்டுள்ளது.
பா.ஜ.,வின் இந்த முடிவுகளை முதல்வர் ரங்கசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து வர சொல்ல, அதன்படி தான் நிர்மல்குமார் சுரானா முதல்வர் ரங்கசாமியை சந்தித்துவிட்டு சென்றுள்ளார்.
சேர்த்தாலும் நஷ்டம் தான்... ஆனால், ல.ஜ.க., வை கூட்டணியில் இணைத்ததில் பா.ஜ.,விற்கு எப்படி பார்த்தாலும் லாபம் என்றாலும், என்.ஆர்.காங்., கட்சிக்கு நஷ்ட கணக்கு தான். ல.ஜ.க.,விற்கு காமராஜ் நகர், நெல்லித்தோப்பு என இரண்டு தொகுதிகளை நீங்கள் ஒதுக்குவது ஒருபக்கம் இருந்தாலும், அந்த கட்சி நமது கூட்டணி கட்சி நிறுத்தும் எட்டு இடங்களில் வேட்பாளர்களை ரெடி செய்துள்ளது. இவர்கள் தேர்தலில் நிற்காமல் இருப்பார்களா... அதைப் பற்றியெல்லாம் முடிவு செய்யாமல் அக்கட்சியை கூட்டணியில் இணைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
உதாரணமாக திருபுவனை தொகுதி என்.ஆர்.காங்., தொகுதியாக இருக்கிறது. அங்கு ல.ஜ.க., அங்காளன் எம்.எல்.ஏ., வை இறக்குகிறது. இதேபோல் முதல்வர் தொகுதியான தட்டாஞ்சாவடி தொகுதியில் ல.ஜ.க., சேதுசெல்வத்தை இறக்கிறது. இப்படி பல தொகுதிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அப்படி இருக்கும்போது ல.ஜ.க., நம்முடைய கூட்டணியில் இப்போது இணைப்பது சரியாகவே இருக்காது. இது தான் எங்களுடைய கருத்து என்று அழுத்தமாக பா.ஜ., மேலிட பார்வையாளரிடம் சொல்லிவிட்டது.
கூட்டி கழித்து பாருங்க... இப்போது தான் அக்கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்களை முழுமையாக சென்றடையவில்லை. வேண்டுமென்றால் அக்கட்சியை கொஞ்சம் காத்திருக்க சொல்லி, காலியாகும் ராஜ்யசபா எம்.பி., பதவியை அவருக்கு நீங்கள் தந்து டில்லிக்கு கூட அழைத்து செல்லலாம். அதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
எனவே எங்களுடன் கூட்டணி ஒருபக்கம் இருந்தாலும், ல.ஜ.க., கூட்டணி கணக்குகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து பாருங்க என்றே என்.ஆர்.காங்., நேரடியாகவே பா.ஜ., மேலிடத்திடம் சொல்லியுள்ளது. எனவே, கூட்டணி சீட்டுகள் மட்டுமின்றி ல.ஜ.க., விவகாரத்தினையும் முதல்வர் ரங்கசாமி உள்துறை அமித்ஷாவிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

