/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜ்பவன் தொகுதியில் என்.ஆர்.காங்., ஆண்டு விழா
/
ராஜ்பவன் தொகுதியில் என்.ஆர்.காங்., ஆண்டு விழா
ADDED : பிப் 08, 2024 05:09 AM

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் என்.ஆர்.காங்., ஆண்டு விழா கட்சி கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
என்.ஆர் காங்.,14-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஓட்டல் அதிதி அருகில் நடந்த விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கட்சி கொடியினை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ராஜ்பவன் தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர்கள், நிர்வாகிகள், மகளிர் அணியினர் என, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் என்.ஆர்.காங்., கொடியினை கையில் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
அண்ணா சாலை, காமராஜர் சாலை, பாக்கமுடையான்பட்டு வழியாக இ.சி.ஆர்., என்.ஆர் காங்., தலைமை அலுவலகத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த என்.ஆர்.காங்., ஆண்டு விழாவில் பங்கேற்றனர்.

