/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.காங்., மாவட்ட தலைவர் நியமனம்
/
என்.ஆர்.காங்., மாவட்ட தலைவர் நியமனம்
ADDED : மே 23, 2025 07:08 AM

புதுச்சேரி : என்.ஆர்.காங்., தெற்கு மாவட்ட தலைவராக முன்னாள் அமைச்சர் தியாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
என்.ஆர்.காங்., மாநில செயலாளர் ஜெயபால் அறிக்கை:
என்.ஆர்.காங்., தலைவரும், முதல்வருமான ரங்கசாமியின் ஒப்புதல் பெற்று கட்சிக்கு மாவட்ட, தொகுதி அளவிலும், பல்வேறு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, தெற்கு மாவட்ட தலைவராக முன்னாள் அமைச்சர் தியாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காரைக்கால் நெடுங்காடு தொகுதி தலைவராக கேசவன்(எ) முருகேசன், திருநள்ளாறு தொகுதி தலைவராக நடேஷ்குமார், ஏனாம் தொகுதி தலைவராக மல்லாடி சாமுவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.