/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.காங்., உறுப்பினர் சேர்க்கை முகாம்
/
என்.ஆர்.காங்., உறுப்பினர் சேர்க்கை முகாம்
ADDED : செப் 07, 2025 11:09 PM

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதி என்.ஆர்.காங்., இளைஞர் அணி சார்பில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
முதலியார்பேட்டை, அகத்தியர் ஹாலில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமை மாநில இளைஞர் அணி தலைவர் ரமேஷ் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
கிழக்கு மாவட்ட என்.ஆர்.காங்., தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான பாஸ்கரன், இளைஞரணி மாநில துணைத் தலைவர் சத்தியா, தொகுதி தலைவர்கள் வீரபத்திரன், ஓம்சக்தி ரமேஷ் முன்னிலை வகித்தனர்.தொகுதி இளைஞர் அணி தலைவர் குமரன் வரவேற்றார்.
முகாமில் முதலியார்பேட்டை, உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த திரளான இளைஞர்கள் கலந்து கொண்டு, ஆன்லைன் மூலம் என்.ஆர்.காங்., கட்சியில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.