/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.காங்., மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
என்.ஆர்.காங்., மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
என்.ஆர்.காங்., மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
என்.ஆர்.காங்., மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : மே 29, 2025 01:24 AM

புதுச்சேரி: என்.ஆர்.காங்., மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். இளைஞர் அணி மாநில தலைவர் ரமேஷ் எம்.எல்.ஏ, முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில பொருளாளர் வேல்முருகன், மாநில மகளிர் அணி தலைவர் ரேவதி பற்குணம், மாநில வழக்கறிஞர் அணி தலைவர் குமரன், மாநில என்.ஆர்.பாசறை அணித் தலைவர் கனகராஜ், மாநில அமைப்புசாரா தொழிலாளர் அணி தலைவர் காத்தவராயன், மாநில கலை மற்றும் இலக்கிய அணி தலைவர் செந்தாமரைக்கண்ணன், தொகுதி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் திருஞானம், பொருளாளர் ஹரி நாராயணன், துணைத் தலைவர்கள் காளிதாஸ், சபரி சீனிவாசன், நாராயணசாமி, சிவலிங்கம், செயலாளர்கள் ஆறுமுகம், கோபி, நடராஜன், இளங்கோவன், லட்சுமிநாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஜெயபால் பேசுகையில், விரைவில் என்.ஆர்.காங்., மாநில மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரித்தார். மாவட்ட பொது செயலாளர் திருஞானம் நன்றி கூறினார்.