/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர். காங்., தொழிற்சங்க துவக்க விழா
/
என்.ஆர். காங்., தொழிற்சங்க துவக்க விழா
ADDED : மே 02, 2025 04:48 AM

திருபுவனை: திருபுவனை தொகுதிக்குட்பட்ட சிலுக்காரிப்பாளையத்தில் மே தினத்தை முன்னிட்டு என்.ஆர்., காங்., தொழிற்சங்க துவக்க விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி திருபுவனை தொகுதி சிலுக்காரிப்பாளையம் பகுதியில் வேதபுரி மக்கள் கிராமம் மற்றும் நகர கட்டடம் கட்டுமான தொழிலாளர்கள் கூட்டமைப்புடன் இணைக்கப்பட்ட அகில இந்திய என்.ஆர்.டி. யூ.சி., தொழிற்சங்க துவக்க விழா, சிலுக்காரிபாளையம் மயிலம் பாதை, குச்சிப்பாளையம் மற்றும் கலிதீர்த்தாள்குப்பத்தில் நேற்று நடந்தது.
விழாவிற்கு என்.ஆர்., காங்.,பொதுச்செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயபால், திருபுவனை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா ஆகியோர் தலைமையேற்று சங்க பெயர் பலகையை திறந்து வைத்து, கொடியேற்றி சிறப்புரையாற்றினர்.
மாநில தொழிற்சங்க தலைவர் குமணன், செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் ரவிக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் பொருளாளர் ராமு, துணைத் தலைவர் வீராசாமி, துணைச் செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் சங்க செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.