/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.காங்., -- பா.ஜ., ஏமாற்று கூட்டணி மாஜி முதல்வர் நாராயணசாமி விமர்சனம்
/
என்.ஆர்.காங்., -- பா.ஜ., ஏமாற்று கூட்டணி மாஜி முதல்வர் நாராயணசாமி விமர்சனம்
என்.ஆர்.காங்., -- பா.ஜ., ஏமாற்று கூட்டணி மாஜி முதல்வர் நாராயணசாமி விமர்சனம்
என்.ஆர்.காங்., -- பா.ஜ., ஏமாற்று கூட்டணி மாஜி முதல்வர் நாராயணசாமி விமர்சனம்
ADDED : பிப் 09, 2025 06:11 AM
புதுச்சேரி: என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி மக்களை ஏமாற்றும் கூட்டணி என, மாஜி முதல்வர் நாராயணசாமி பேசினார்.
மத்திய மாநில அரசை கண்டித்து இளைஞர் காங்., சார்பில் ஜென்மராகினி மாதா கோவில் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாஜி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது;
தமிழ்நாட்டில் என்.ஆர்.காங்., போட்டியிடும் என ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் ஒன்றும் செய்யாமல் தமிழ்நாட்டில் போட்டியிட போகிறாராம். உத்தரபிரதேசத்தில் கூட ரங்கசாமி வேட்பாளரை நிறுத்துவார். புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. தமிழகத்தில் போட்டியிட போகிறாராம். முதல்வர் நாற்காலிக்காக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்து கொள்வார். கட்சி கட்டமைப்பு இன்றி என்.ஆர்.காங்., எல்லாரையும் ஏமாற்றி ஆட்சி வந்துள்ளது.
கவர்னருடன் காங்., சண்டையிட்டு கடந்த ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டி உள்ளார். காங்., ஆட்சியில் தான் அரும்பார்த்தபுரம் மேம்பாலம், மேரி கட்டடம், காமராஜர் மணிமண்டபம் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டு வந்தோம்.
நீங்கள் மோடி, அமித்ஷா மற்றும் கவர்னருடன் நெருக் கமாக இருக்கிறீர்கள். உங்களால் மாநில அந்தஸ்து, மாநில கடனை ஏன் தள்ளுபடி செய்ய முடியவில்லை. ஒரு தொழிற்சாலை கூட கொண்டுவரவில்லை.
பா.ஜ., அமைச்சர்கள் ஒரு பக்கம், சபாநாயகர் ஒரு பக்கம், எம்.எல்.ஏ.க்கள் ஒருபக்கம் உள்ளனர். என்.ஆர்.காங்., கட்சியில் எல்லோரும் அடிமையாக இருக்கின்றனர். என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி மக்களை ஏமாற்று கூட்டணி. ரங்கசாமி, அமைச்சர்கள் புதுச்சேரியை சுரண்டி கொண்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

