ADDED : அக் 30, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நிறைவு விழா நடந்தது.
பள்ளி துணை முதல்வர் தில்லைக்கண்ணு காமராஜ் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கலந்து கொண்டு ஏழு நாள் சிறப்பு முகாம் மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து பாராட்டு தெரிவித்தார். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் எழில்வேந்தன் செய்திருந்தார். விரிவுரையாளர் லதா நன்றி கூறினார்.