ADDED : அக் 18, 2024 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., ஏழு நாள் முகாம் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் எழில் கல்பனா தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் தெய்வகுமாரி வரவேற்றார். உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., மாறன் குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார்.
என்.எஸ்.எஸ்., மாநில திட்ட அலுவலர் சதிஷ்குமார் நோக்க உரையாற்றினார். திட்ட அலுவலர் அன்புமொழி நன்றி கூறினார். ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.