/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்துரத்தின அரங்கம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., அறிமுக விழா
/
முத்துரத்தின அரங்கம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., அறிமுக விழா
முத்துரத்தின அரங்கம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., அறிமுக விழா
முத்துரத்தின அரங்கம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., அறிமுக விழா
ADDED : ஜூன் 21, 2025 12:55 AM

புதுச்சேரி : புதுச்சேரி கவுண்டன் பாளையம் முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித்திட்ட அறிமுக விழா நடந்தது.
பள்ளி தாளாளர் ரத்தின ஜனார்த்தன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், துணை முதல்வர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை விருந்தினராக மாநில அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் பங்கேற்று, விழாவினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
பள்ளி அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கலைவாணி நாட்டு நலப்பணித்திட்டத்தின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். புதுச்சேரி மாநில ஒருங்கிணைத்த கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் சுந்தர்ராஜன் வாழ்த்தி பேசினார்.
ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி, முன்னாள் நலப்பணித்திட்ட அலுவலர் நெடுஞ்செழியன், பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் ஆகியோர் செய்திருந்தனர்.