ADDED : அக் 14, 2024 08:17 AM

புதுச்சேரி : புதுச்சேரி புனித பேட்ரிக் பள்ளி சார்பில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் முத்துரத்தின அரங்க மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்கடந்த 10ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
அதையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு தன்னம்பிக்கை பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் சைபர் கிரைம்கள் அதிகரித்து வருவதால் மொபைல் போனில் தேவையில்லாத லிங்க்கை திறக்க கூடாது. அதில் கேட்கும் விபரங்களை தரக்கூடாது என, அறிவுறுத்தினார்.
சிறப்பு விருந்தினராக ஆசிரியர் எமில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து, கவுண்டன்பாளையம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற மாணவிகள் டெங்கு கொசுக்கள் பெருகும் வழிகள், அதனை அகற்றுவதற்கான வழிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாம் அலுவலர் இளங்கோ, ேஹமந்த், அருணா, வனிதா, திட்ட அலுவலர் ஆரோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.