
புதுச்சேரி : பேராசிரியர் பாண்டியன் எழுதிய 'சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள், சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள்' ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் நடந்தது.
விழாவில்,மயிலம் பொம்மபுர ஆதீனம், 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் கலந்து கொண்டு நுால்களை வெளியிட்டு, நுாலாசிரியர் பாண்டியனுக்கு 'சித்தர் இலக்கியச் செம்மல்' விருது வழங்கினார்.
நுாலின் முதற்படிகளை பிரான்சு நாடு பாவலர் பத்ரிசியா பாப்புராயர், மருத்துவர் முத்துராமன் சண்முகவேல், மியான்மர் சந்திரசேகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பேராசிரியர் இளமதி ஜானகிராமன் தலைமை தாங்கினார்.
பேராசிரியர் அவ்வை நிர்மலா, மருத்துவர் கலைவேந்தன் ஆகியோர் நுால்களை அறிமுகம் செய்து பேசினர்.
இதில், தமிழமல்லன், சீனு வேணுகோபால், பூபதி, நெய்தல் நாடன், கோவிந்தராஜன், பேராசிரியர் அரங்க முருகையன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நுாலாசிரியர் பாண்டியன் ஏற்புரை வழங்கினார்.
பூங்குழலி பெருமாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
ஏற்பாடுகளை வயல்வெளிப் பதிப்பக நிர்வாகிகள் செய்திருந்தனர்.
திருவாசகம் நன்றி கூறினார்.