/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செவிலியர் கல்லுாரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
செவிலியர் கல்லுாரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
செவிலியர் கல்லுாரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
செவிலியர் கல்லுாரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 17, 2025 06:09 AM
புதுச்சேரி; இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி செவிலியர் கல்லுாரியின் முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நல சங்க தலைவர் பாலா வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நல சங்க தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திராகாந்தி அரசு மருத்துவகல்லுாரி மற்றும் மருத்துவமனையில் நடந்த ஆயுஸ்மான் பாரத பிரதம மந்திரியின் 70 வயதுக்கு மேல் உள்ள சீனியர் சிட்டிசன் காப்பீடு திட்ட விழா நடந்தது.
கவர்னர், முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ., கலந்து கொண்ட விழாவில், அக்கல்லுாரி இயக்குநர் உதயசங்கர் தவறான அனுகுமுறையால், விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் நிகழ்ச்சியை கவர்னர், முதல்வர் புறக்கணித்து சென்றனர்.
இதற்கு இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி செவிலியர் கல்லுாரியின் முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு துணைபோன சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் இந்திராகாந்தி அரசு கல்லுாரி இயக்குநர் மீது உரிய நடவடிக்கையினை சுகாதாரத்துறை செயலகம் எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

