ADDED : மே 13, 2025 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஒவ்வொரு ஆண்டும், மே 12ம் தேதி, புளோரன்ஸ் நைட்டிங் கேள் பிறந்த நாளை, உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில், நேற்று செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டது. , உதவி செவிலியர் கண்காணிப்பாளர் மதி பக்கிரிசாமி தலைமை தாங்கினார். கலைச்செல்வி, அம்சவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில், செவிலியர்கள் ஒருவொருக்கு ஒருவர், வாழ்த்து தெரிவித்து கொண்டனர். விழாவில், முதுநிலை மருத்துவர்கள், முதுநிலை செவிலியர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.