நர்சிங் தேர்வு: அரசு ஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு
நர்சிங் தேர்வு: அரசு ஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு
ADDED : ஜூலை 10, 2026 01:37 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: நர்சிங் தேர்வில்அரசு ஒதுக்கீட்டின் வரைவு பட்டியலில்ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
இந்த கல்வியாண்டிற்கான நீட் அல்லாத நர்சிங் நுழைவு தேர்வின் அரசு ஒதுக்கீட்டுக்கான வரைவு தகுதி பட்டியல் நேற்று (9ம் தேதி)வெளியிடப்பட்டது. இப்பட்டியலில், ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், வரும் 13ம் தேதி காலை 10 மணிக்குள் டாஷ்போர்டில் லாகின் செய்து தெரிவிக்கலாம்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கை நர்சிங் நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டது. அதே சமயம் சுயநிதி, என்.ஆர்.ஐ., இடங்களுக்கு நீட் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
