ADDED : ஜூலை 10, 2026 01:37 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெயில் நேற்று 100.6 டிகிரியாக பதிவானதால், மக்கள் அவதியடைந்தனர்.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், பொதுமக்கள் பகல் நேரத்தில் கடும் வெயில் காரணமாக வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், நடப்பு கோடைக்காலத்தை தொடர்ந்து தற்போது புதுச்சேரியில் நேற்று 100.6 டிகிரி பாரன்ஹிட் வெயில் பதிவானது. இதன் காரணமாக, நேற்றுவுடன் சேர்ந்து இந்தாண்டு கோடைக் காலத்தில் 30வது முறையாக வெயில் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
