/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செவிலியர் மாணவிகள் கவர்னருக்கு நன்றி
/
செவிலியர் மாணவிகள் கவர்னருக்கு நன்றி
ADDED : ஆக 06, 2025 08:48 AM

புதுச்சேரி : எய்ம்ஸ் மருத்துவம னையில் சேர்ந்த புதுச்சேரி மாணவர்கள் பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் முன்னிலையில் கவர்னர் கைலாஷ்நாதன் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
புதுச்சேரி மாநிலத்திலிருந்து 21 மாணவர்கள், எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் பணிக்கு தேர்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழ் பெறுவதிலும், சான்றிதழ் சரிபார்பிலும் சில குளறுபடிகள் காரணமாக இவர்களுடைய செவிலியர் நியமன உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அதையடுத்து தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கத்திடம் நேரில் சந்தித்து முறையிட்டனர்.
இதையடுத்து பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் கவர்னர் கைலாஷ்நாதனிடம் இது தொடர்பாக தெரிவித்தார். இதனை ஏற்று கவர்னர் துரித நடவடிக்கையின் மூலம் மாணவர்கள் அனைவருக்கும் சென்ற வாரம் நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் முன்னிலையில் நேற்று கவர்னர் மாளிகையில் கவர்னரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.