தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்

ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்

ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : செப் 23, 2026 04:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 04:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம் சார்பில், ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம் திருக்கனுாரில் நடந்தது.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் வில்லியனுார், ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம்–1 சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருக்கனுார் பகுதியில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சுஷ்மிதா துவக்கி வைத்தார். ஹோமியோபதி டாக்டர் ஸ்ரீதேவி, சுகாதார ஆய்வாளர் முனுசாமி முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தில், ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாக ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், அதனை தவிர்க்கும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கிராமப்புற செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள், மாணவ,  மாணவிகள், களஞ்சியம் மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்றனர்.

திருக்கனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் துவங்கிய ஊர்வலம் வணிகர் வீதி, பிள்ளையார் கோவில் வீதி, கடைவீதி வழியாக மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தை வந்தடைந்தது. ஏற்பாடுகளை அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us