தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொகுதி தோறும் விழிப்புணர்வு நாடகம் பா.ஜ., மாநில தலைவர் அறிவிப்பு

தொகுதி தோறும் விழிப்புணர்வு நாடகம் பா.ஜ., மாநில தலைவர் அறிவிப்பு

தொகுதி தோறும் விழிப்புணர்வு நாடகம் பா.ஜ., மாநில தலைவர் அறிவிப்பு

1


ADDED : செப் 23, 2026 04:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 04:12 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிரதமரின் பிறந்த நாளையொட்டி தொகுதிகள் தோறும் நாடகம் நடைபெறும் என பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், கூறியதாவது:

பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவை சேவை மாதமாக கொண்டாடி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, தொகுதிகள் தோறும் நான்கு இடங்களில், பொழுதுபோக்கு, விழிப்புணர்வு தெருவோர நாடங்கள் நடக்கும்.

இதில், ஆயுஷ்மான்பாரத், முத்ரா, சோலார், ஜல்ஜீவன் உட்பட மத்திய அரசின் திட்டங்கள் குறிப்பிடப்படும். இந்நிகழ்வை தேசிய பொதுசெயாளர் சந்தோஷ் வரும் 27ம் தேதி காலை 7 மணிக்கு துவக்கி வைக்கிறார்.

அதேபோல், மீனவர் பிரிவு சார்பில், துணைத் தலைவர் பழனி தலைமையில், கடற்கரை சாலை காந்தி சிலை அருகில், மோடி 25 என்ற நிகழ்ச்சியில், 70 படகுகள் நிற்கவைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

மேலும் மத்திய அரசின் சாதனைகளை ஓவியக் கண்காட்சி மூலம் பார்வைக்கு வைக்க உள்ளோம். மாகே, ஏனாமிலும் இந்த நாடக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். சமூக ஊடகங்கள் மூலம் சாதனைகள் வெளியிடப்படும்.

மேலும் ரத்த தானம், மரம் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. வில்லியனுாரில் இருந்து ஜோதி யாத்திரை நடக்கிறது. தற்போது அங்கன்வாடி விழா நடக்கிறது. அதேபோல், வெளியில் தெரியாத சேவை பணியாளர்களை மரியாதை செய்ய உள்ளோம். பிரதமர் பிறந்த இடம் முதல், வாரணாசி வரை நடக்கும் நிகழ்ச்சியில் புதுச்சேரி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில், பா.ஜ.,வினர் கடுமையாக உழைத்து, 10 ஆயிரம் ஓட்டு வித்யாசத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் அசோக் ஆனந்தை வெற்றி பெற செய்வோம். ராகுலை முன்னிறுத்தினால், வெற்றி பெற முடியாது என தெரிந்து விஜயை முன்னிறுத்துகின்றனர். காங்., பலம் இனி எடுபடாது’ என்றார்.

சபாநாயகர் பா.ஜ.,வுக்கு தான்:

தொடர்ந்து அமுன்னாள் சபாநாயகர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசியபோது,‘சபாநாயகர் பதவி பா.ஜ.,வுக்கு தான் என மேலிட பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி சபாநாயகர் பதவியும் எங்களுக்குதான், மூன்று நியமன எம்.எல்.ஏ.,களும் எங்களுக்குதான்’ என்றார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us