தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுப்பேட்டையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் தி.மு.க., அமைப்பாளர் சிவா உறுதி

புதுப்பேட்டையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் தி.மு.க., அமைப்பாளர் சிவா உறுதி

புதுப்பேட்டையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் தி.மு.க., அமைப்பாளர் சிவா உறுதி


ADDED : செப் 23, 2026 04:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 04:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் சேதுசெல்வத்தை ஆதரித்து தொகுதிக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் நேற்று வீடு, வீடாக சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, மாநில அமைப்பாளர் சிவா பேசுகையில், ‘வேட்பாளர் சேதுசெல்வம் வெற்றி பெற்றால் புதுப்பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் மக்களுக்கு இலவச மனைப்பட்டா, அடுக்குமாடி குடியிருப்புகள் பெற்றுதரப்படும்.

இப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தடையற்ற மின்சாரம், விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு, முருகேசன் நகர் பகுதி இளைஞர்களின் தேவைக்காக விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கும் புத்துளை மாரியம்மன் கோவில் இடத்தை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதுப்பேட்டை பகுதி கூலித் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நலவாரியம் மூலம் உதவி கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்ளூர் இளைஞர்களுக்கு தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். ஆகையால், இப்பகுதி மக்கள் ‘உதயசூரியன்’ சின்னத்தில் ஓட்டு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஓட்டு சேகரிப்பின்போது, நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us