ADDED : மார் 27, 2025 03:58 AM

பாகூர்: பாகூரில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் சத்துணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், பாகூர் முத்தாலம்மன் கோவில் அருகே நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, பாகூர் பகுதி பொறுப்பாளர் மகாலட்சுமி வரவேற்றார். குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி நிர்மலாதேவி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், சிறுதானியம், கீரைகள், பழங்கள், காய்கறி உள்ளிட்ட சத்துணவுகள் குறித்து கலை நிகழ்ச்சிகள், ஆடல், பாடல், இசையுடன் பொதுமக்களும் புரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள், கர்ப்பிணிகள், தாய்மார்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அங்கன்வாடி ஆசிரியர்கள் தேவகி, கீதா, தமயந்தி, மாயாவதி, தமிழரசி, ஆனந்தி, சரோஜினி, கலைச்செல்வி, கோமதி, தேவி, ராதை, ராஜேஸ்வரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.