ADDED : மார் 02, 2026 03:56 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து லாஸ்பேட்டை தொகுதியைச் சேர்ந்த காசநோயாளிகளுக்கு தனது சொந்த செலவில் ஊட்டச்சத்து உணவு பெட்டகம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மூத்த மருத்துவ அதிகாரி பத்மினி, துணை செவிலியர் ராதா முத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முதுநிலை காசநோய் மேற்பார்வையாளர் பாஸ்கரன், துணை செவிலியர் மீரா ஆகியோர் செய்திருந்தனர்.
