/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம்
/
ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ADDED : ஜூலை 25, 2025 02:33 AM

புதுச்சேரி: ஆடி அமாவாசையையொட்டி, கடற்கரையில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.
ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த நாட்களில் ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு உறவினர்கள் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
இந்த நாட்களில் தர்ப்பணம் கொடுப்பதால், வாழ்வில் துன்பங்கள் விலகி, முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதன்படி, நேற்று ஆடி அமாவாசையொட்டி, புதுச் சேரி கடற்கரையில், ஏராள மானோர், அதிகாலையிலேயே வந்து, கடலில் புனித நீராடி தங்களது முன் னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதையொட்டி, மணக்குள விநாயகர், காந்தி வீதி வேதபுரீஸ்வரர், வரதராஜப் பெருமாள், பாரதி வீதி காமாட்சி அம்மன், லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி, சாரம் முருகர் உள்ளிட்ட கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகளுக்கு கடற்கரையில் தீர்த்தவாரி நடந்தது.
நிகழ்ச்சியில், ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு, தீர்த்தவாரிக்கு வந்த சுவாமிகளை வழிப்பட்டனர்.
அதே போல், வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றில், ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.

