கூடுதல் வருமான வரித்துறை அதிகாரி பணி ஓய்வு பாராட்டு விழா
கூடுதல் வருமான வரித்துறை அதிகாரி பணி ஓய்வு பாராட்டு விழா
UPDATED : ஜூன் 30, 2026 09:17 PM
ADDED : ஜூன் 30, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி வருமான வரித்துறையில் பணியாற்றிய கூடுதல் வருமான வரித்துறை அதிகாரி செல்வி ஆறுமுகம், பணி ஓய்வு பாராட்டு விழா சென்பகா ஹோட்டலில் நடந்தது.
விழாவிற்கு, புதுச்சேரி ரேஞ்ச் இணை ஆணையாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். வருமான வரித்துறை அதிகாரி செங்குட்டுவன் மற்றும் இணை ஆணையாளர் அனுப்பிரியா முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி, கடலுார் மற்றும் விழுப்புரம் பகுதிகளைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்று பணி ஓய்வு பெற்ற செல்வி ஆறுமுகத்திற்கு பாராட்டு தெரிவித்து அவருக்கு நினைவு பரிசுகள் வழங்கினர். செல்வி ஆறுமுகம், ஏற்புரை வழங்கினார்.
