/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பதற்றமான ஓட்டுச்சாவடிகள் அதிகாரிகள் ஆலோசனை
/
பதற்றமான ஓட்டுச்சாவடிகள் அதிகாரிகள் ஆலோசனை
ADDED : மார் 20, 2024 02:08 AM

புதுச்சேரி, : பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள்குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
லோக்சபா தேர்தலில் புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் 733 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சமின்றி ஓட்டு அளிப்பதற்கான சூழலை ஏற்படுத்தவும், பதற்றமான ஓட்டுச்சாவடிகளை முன்கூட்டியே கண்டறிந்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார்.
உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்கள் தொகுதியில் உள்ள பதற்றமான பகுதிகளாக கண்டறியப்பட்ட ஓட்டுச்சாவடிகள் குறித்து விளக்கினர். மாதிரி ஓட்டுச்சாவடி, பெண்களுக்கான ஓட்டுச்சாவடி, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டுச்சாவடி அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தபால் ஓட்டுக்கள் பெறுதல், 85 வயது கடந்தவர்கள் ஓட்டு அளிப்பதிற்கான முன்னேற்பாடுகளை துரிதப்படுத்தவும், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் குடிநீர், மின்சாரம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை செய்ய கலெக்டர் குலோத்துங்கள் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் சப்கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் கோதாரு, உதவி கலெக்டர் யஷ்வந்த் மீனா, மாவட்ட துணை தேர்தல் அதிகாரி வினயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

