ADDED : மார் 18, 2026 04:50 AM

புதுச்சேரி: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள புதுச்சேரியில், தேர்தல் நடத்தை விதிமீறல்களை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது. வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான மனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் கடந்த 15ம் தேதி இரவு அறிவித்தார். ஆனால், பல இடங்களில் அரசியல் கட்சிகளின் பேனர் மற்றும் போஸ்டர்கள் அகற்றப்படாமல் உள்ளது.
குறிப்பாக மனு தாக்கல் நடைபெறும் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள்ளாகவே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதேபோன்று, அனைத்து துறை அதிகாரிகள் சென்று வரும் மறைமலையடிகள் சாலையில் உள்ள 'மெகா ேஹார்டிங் ' அகற்றப்படாமல் உள்ளது.
இதேபோன்று தமிழகத்தில், தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியில் எந்த சிலைகளும் மூடப்படாமல் உள்ளது, அதிகாரிகளின் மெத்தனத்தையே காட்டுகிறது.
