ADDED : நவ 17, 2026 11:09 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையில் கொட்டிய ஆயிலை, தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து அகற்றினர்.
புதுச்சேரி காமராஜர் சாலையில், உப்பனாறு பாலம் அருகே இன்று (நவ.,17) மாலை 5:40 மணியளவில், அடையாளம் தெரியாத வாகனத்தில் இருந்து ஆயில் வெளியேறி சாலையில் கொட்டியது.
இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் கொட்டி இருந்த ஆயிலில் வழுக்கி விழும் அபாயம் ஏற்பட்டது. தகவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு நிலைய அதிகாரி சுகுமாரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையில் கொட்டிக் கிடந்த ஆயிலை தண்ணீர் பீய்ச்சி அடித்து அகற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
