நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மாயமான மூதாட்டி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 65.
இவர் கடந்த 20ம் தேதி ஜிப்மர் மருத்துவனைக்கு வந்தார். பின் வீட்டிற்கு செல்லவில்லை. இவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.