ADDED : ஜூன் 22, 2025 02:05 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி : சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி பழைய சட்டக் கல்லுாரி அருகே சாலையில், 65 வயது மதிக்கத் தக்க, அடையாளம் தெரியாத முதியவர், கடந்த 18ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என, தெரியவில்லை. புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
