தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூதாட்டி தீ குளித்து தற்கொலை

 மூதாட்டி தீ குளித்து தற்கொலை

 மூதாட்டி தீ குளித்து தற்கொலை


ADDED : ஏப் 22, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே மூதாட்டி தீ குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை சுனாமி நகரை சேர்ந்தவர் வீரம்மாள் வயது, 65. இவரது கணவர் இறந்த நிலையில், மகள் கவிதாவின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வீராம்மாள் பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் குடியிருப்பு நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளராக பணி செய்து வந்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், பணியின் போது, அதிக பலு துாக்கியதின் காரணமாக குடல் இறக்கம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்து குணமாகி கடந்த 6 மாதங்களாக வீட்டிலேயே இருந்து வந்தார்.

இதனால், அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீரம்மாள், தனது மகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வீட்டில் துாங்கி கொண்டு இருந்தனர். இரவு 10:30 மணியளவில், வீரம்மாள் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரின் அலரல் சத்தம் கேட்டு, அவரது மகள் கவிதா மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று, வீரம்மாளை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைவில் சேர்த்தனர்.

அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீஸ் சிறப்பு உதவி சப்இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us