வில்லியனுார்: வில்லியனுார் அருகே மூதாட்டி துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மனைவி வச்சலா,68; இவர் கடந்த சில ஆண்டுகளாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். அவ்வப்போது உடல் நிலை மோசமானதால் மனமுடைந்த அவர் கடந்த 3ம் தேதி வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை சாப்பிட்டார்.
தகவலறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினார்.
இந்நிலையில் வச்சலாவிற்கு திடீர் என வயிற்று வலி ஏற்பட்டுள்ளது, இதனால் மனமுடைந்த வச்சலா நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

