/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் முதல்வருடன் ஓம்சக்தி சேகர் சந்திப்பு
/
முன்னாள் முதல்வருடன் ஓம்சக்தி சேகர் சந்திப்பு
ADDED : நவ 25, 2025 05:37 AM

புதுச்சேரி: சென்னையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
இதில் அனைத்து மாநில, மாவட்ட செயலாளர்களிடம் தற்போதைய அரசியல் சூழலைப் பற்றி தனித்தனியாக கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த சந்திப்பில் புதுச்சேரி மாநிலம் சார்பில், மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் பங்கேற்றார். புதுச்சேரி மாநில அரசியல் நிலவரம் குறித்து கருத்துகளை பகிர்ந்தார்.
வளர்ச்சியை முன்னிறுத்திய கருத்துக்கள் அடங்கிய மனுவை, புதுச்சேரி மாநிலம் சார்பில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், தமிழக முன்னாள் முதல்வர் பன்னீசெல்வத்திடம் வழங்கினார்.

