/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.600 கோடி நிவாரணம் ஓம்சக்தி சேகர் கோரிக்கை
/
ரூ.600 கோடி நிவாரணம் ஓம்சக்தி சேகர் கோரிக்கை
ADDED : டிச 10, 2024 06:41 AM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு புயல் நிவாரணமாக ரூ. 600 கோடி வழங்க வேண்டும் என அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர், புதுச்சேரியில் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவிடம் அளித்த மனு விபரம்:
புதுச்சேரி மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு, இழப்பீடாக ரூ.25,000 வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூ.1 லட்சமும், இறந்த கால்நடைகளுக்கு ரூ.50 ஆயிரம், விசைப்படகிற்கு ரூ.1 லட்சம், மீன்பிடி வலைக்கு ரூ.10 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முழுதும் இடிந்த வீட்டிற்கு ரூ.3 லட்சம், பகதி சேத வீட்டிற்கு ரூ.1 லட்சம், குடிசைகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்.
புதுச்சேரி அரசு ரூ.600 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்துள்ளது.
எனவே, போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க மத்திய அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

