/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளிகளில் நீட் பயிற்சிக்கு பொறுப்பாசிரியர் நியமிக்க வேண்டும் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 29, 2025 07:35 AM
புதுச்சேரி : நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்க ஒவ்வொரு அரசு பள்ளிகளுக்கும் பொறுப்பாசிரியர்கள் நியமிக்க வேண்டும் என அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
தற்போது வெளியிட்டிருக்கும் சென்டாக் தரவரிசை பட்டியல் புதுச்சேரி மக்களை கவலை அடைய செய்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் 52 இடங்களுக்கு 29 பேர் மட்டுமே தகுதி பெற்றிருப்பது கவலையடைய செய்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில வேண்டும் என்பதற்காக முதல்வர் எடுத்த நடவடிக்கை உரிய பலனை அளிக்காத நிலை உள்ளது.
தனியார் பள்ளிகளில் 'நீட்' பயிற்சி முக்கிய பாடமாக பிளஸ் 1 வகுப்பில் இருந்தே பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்கான தொகையும் வசூலிக்கின்றனர். ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு அது போன்ற வாய்ப்பு இல்லை. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அறிமுகப்படுத்தினாலும், மாணவர்கள் நீட் தேர்வில் உரிய மதிப்பெண் பெற முடியாத நிலை உள்ளது. எனவே, அரசு பள்ளிகளில் நீட் தேர்விற்கு என பொறுப்பாசிரியர்களை நியமித்து பயிற்சி அளிக்க வேண்டும். பிளஸ்1 வகுப்பில் இருந்து மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.