/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பண்டிகைகளுக்கு பின் 'ஹெல்மெட்' அரசுக்கு ஓம்சக்தி சேகர் கோரிக்கை
/
பண்டிகைகளுக்கு பின் 'ஹெல்மெட்' அரசுக்கு ஓம்சக்தி சேகர் கோரிக்கை
பண்டிகைகளுக்கு பின் 'ஹெல்மெட்' அரசுக்கு ஓம்சக்தி சேகர் கோரிக்கை
பண்டிகைகளுக்கு பின் 'ஹெல்மெட்' அரசுக்கு ஓம்சக்தி சேகர் கோரிக்கை
ADDED : டிச 21, 2024 05:38 AM
புதுச்சேரி: பண்டிகை காலங்களுக்கு பின் ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த காலங்களில் கட்டாய தலை கவசம் என்ற அறிவிக்கப்படுவதும், உடனடியாக மக்கள் ஹெல்மெட் கடைகளை தேடி அலைந்து வாங்கி அணிவதும், சில தினங்களில் ஹெல்மெட் கட்டாயம் இல்லை என வாய்மொழி அறிவிப்பு வந்ததும், அந்த அறிவிப்பு காலாவதி ஆவதும் தொடர் கதையாக உள்ளது.
மாநிலத்தில் ஏற்கனவே ஹெல்மெட் அணியவில்லை என, அபராதம் வசூலிக்கப்படுகிறது. பெஞ்சல் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வராத நிலையில் அவர்களுக்கு புதிய செலவாக இந்த ஹெல்மெட் வாங்குவது கடினமான ஒன்று.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புதுச்சேரியை நோக்கி மக்கள் வரக்கூடிய சூழலில் இந்த ஹெல்மெட் சட்டம் பிற மாவட்ட மக்களின் வருகையை பாதிக்கும்.
இதனால் மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாய் பாதிக்கும்.
எனவே, பண்டிகை காலங்களுக்கு பின் ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர், கூறியுள்ளார்.

