/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மெத்தன அதிகாரிகள் மீது நடவடிக்கை முதல்வருக்கு ஒம்சக்தி சேகர் கோரிக்கை
/
மெத்தன அதிகாரிகள் மீது நடவடிக்கை முதல்வருக்கு ஒம்சக்தி சேகர் கோரிக்கை
மெத்தன அதிகாரிகள் மீது நடவடிக்கை முதல்வருக்கு ஒம்சக்தி சேகர் கோரிக்கை
மெத்தன அதிகாரிகள் மீது நடவடிக்கை முதல்வருக்கு ஒம்சக்தி சேகர் கோரிக்கை
ADDED : ஜன 21, 2025 06:28 AM
புதுச்சேரி: மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெஞ்சல் புயலால் மக்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் இன்னும் வழங்கப்படாமல் உள்ளதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். உடனடியாக அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புயல் பாதிப்பினால் முழுமையாகவும், சிறிய அளவில் வீடு இழந்தவர்களுக்கும் இதுவரை உரிய நிவாரணம் வழங்கவில்லை. இதற்கும் அதிகாரிகள் உரிய கணக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தியது காரணமாகும்.
புதுபஸ்டாண்ட் திறப்பு வழக்கு காரணமாக தள்ளிப் போய் வருகின்றது. ஆரம்பத்திலேயே கடை ஒதுக்கீடு குறித்து முறையான அறிவிப்பை அதிகாரிகள் செய்திருந்தால் பிரச்னை இல்லாமல் இருந்திருக்கும். இப்போது நீதிமன்றம் வரை பிரச்னை சென்று திறப்பு விழா தள்ளிப் போகக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் முதல்வர் பல்வேறு சிரமங்களுக்கு இடையே அறிவிக்கும் திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுபோன்று மெத்தனப் போக்கில் செயல்படும் அதிகாரிகள்மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

