sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெயிண்டரை வெட்டி கொல்ல முயன்ற வழக்கில் ஒருவர் கைது 

பெயிண்டரை வெட்டி கொல்ல முயன்ற வழக்கில் ஒருவர் கைது 

பெயிண்டரை வெட்டி கொல்ல முயன்ற வழக்கில் ஒருவர் கைது 


ADDED : ஜூன் 19, 2025 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2025 04:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர் : கரையாம்புத்துாரில் பெயிண்டரை வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கரையாம்புத்துாரில் கடந்த மாதம் நடந்த கோவில் திருவிழாவில் கரகாட்ட நிகழ்ச்சியின் போது, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும், தமிழக பகுதியான களிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக, கரையாம்புத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இப்பிரச்னைக்கு, கரையாம்புத்துாரை சேர்ந்த ராஜா மகன் பெயிண்டர் மதன்ராஜ், 21, என்பவர் தான் காரணம் என, களிஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அவர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.

கடந்த 14ம் தேதி இரவு மதன்ராஜ் கரையாம்புத்துாரில் உள்ள கடையில் மதுபானம் வாங்கியபோது, ஒரு கும்பல் அவரை கடத்தி சென்று, தென்பெண்ணை ஆற்றில் வைத்து வெட்டி, கொடூரமாக தாக்கி, சாலையில் வீசி விட்டு தப்பிச் சென்றனர்.

புகாரின் பேரில் பாகூர் போலீசார், களிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த வீரமணி, அருள் பிரகாஷ், பாவாடை ராயன், குப்பகரன், ஐயப்பகரன், பிரவீன் குமார் (எ) அப்பு, விக்கி ஆகியோர் கொண்ட கும்பல் மீது கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, தேடி வந்தனர்.

இதனிடையே ஐயப்பகரன், 22; என்பவரை, தனிப்படை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us