/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரைஸ் மில் பூட்டை உடைத்து திருட்டு ஒருவர் கைது; 2 பேர் தப்பி ஓட்டம்
/
ரைஸ் மில் பூட்டை உடைத்து திருட்டு ஒருவர் கைது; 2 பேர் தப்பி ஓட்டம்
ரைஸ் மில் பூட்டை உடைத்து திருட்டு ஒருவர் கைது; 2 பேர் தப்பி ஓட்டம்
ரைஸ் மில் பூட்டை உடைத்து திருட்டு ஒருவர் கைது; 2 பேர் தப்பி ஓட்டம்
ADDED : ஜன 04, 2025 04:49 AM
பாகூர்: பாகூர் அடுத்த குருவிநத்தம் பெரியார் நகர் புத்து கோவில் அருகே ரைஸ் மில், மற்றும் அதையொட்டி, தாம்பூல பை தயாரிக்கும் கடை உள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் ரைஸ் மில் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லா பெட்டியில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு, பக்கத்தில் உள்ள பை கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றனர்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்ததால், கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதனிடையே ரோந்து பணியில் ஈடுபட்ட பாகூர் போலீசார், மர்ம நபர்கள் 3 பேரை மடக்கி பிடித்தனர்.
அப்போது, போலீசாரை தள்ளி விட்டு விட்டு இரண்டு பேர் தப்பி சென்றனர். ஒருவர் மட்டும் சிக்கி கொண்டார். விசாரணையில், அவர், கடலுார் மாவட்டம், நெய்வேலியை சேர்ந்த பிரேம்குமார், 26, என, தெரிய வந்தது.
இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிந்து, பிரேம்குமாரிடம், தப்பி ஓடிய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, பிரேம்குமாரிடம், ரெட்டிச்சாவடி போலீசார் தங்கள் எல்லையில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.