/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வி.சி., பெண் நிர்வாகி மீது தாக்குதல் கண்டமங்கலத்தில் ஒருவர் கைது
/
வி.சி., பெண் நிர்வாகி மீது தாக்குதல் கண்டமங்கலத்தில் ஒருவர் கைது
வி.சி., பெண் நிர்வாகி மீது தாக்குதல் கண்டமங்கலத்தில் ஒருவர் கைது
வி.சி., பெண் நிர்வாகி மீது தாக்குதல் கண்டமங்கலத்தில் ஒருவர் கைது
ADDED : ஜன 27, 2025 04:51 AM
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே வி.சி., கட்சி பெண் நிர்வாகியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே அம்மணங்குப்பம் காலனியை சேர்ந்த செல்வம் மனைவி பொம்பியம்மாள், 27; வி.சி.கட்சி துணை செயலாளராக உள்ளார். இவர் புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செவிலியாராக வேலை செய்து வருகிறார்.
இவர், நேற்று காலை கன்று குட்டிகளை மேய்ச்சலுக்காக வயலுக்கு ஒட்டி சென்றபோது, அதே கிராமத்தை சேர்ந்த சக்திவேல், 48; என்பவரின் நிலத்திலிருந்த வைக்கோலை கன்றுகுட்டிகள் மேய்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், பொம்பியம்மாளிடம் தகராறு செய்து தாக்கினார்.
இதுபற்றி கண்டமங்கலம் போலீசில் புகார் கொடுக்க பொம்பியம்மாள் தனது கணவருடன் சென்றார்.
அப்போது, சக்திவேல் 48; மற்றும் அவரது அண்ணன் மகன் குமரேவேல், 23; ஆகியோர், இருவரையும் வழிமறித்து தாக்கினர். கத்தியால் வெட்டியதில் பொம்மியம்மாளின் முகத்தில் காயமடைந்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அரியூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்த வி.சி.க., கட்சியினர் கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். டி.எஸ்.பி., நந்தக்குமார் மற்றும் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், வி.சி.,கட்சியினர் கலைந்து சென்றனர்.
புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, சக்திவேலை கைது செய்தனர்.

