நவோதயாவில் தெரிவு நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
நவோதயாவில் தெரிவு நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:09 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: நவோதயாவில் தெரிவு நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி நவோதயா பள்ளி முதல்வர் கண்ணதாசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நவோதயா பள்ளி இயங்கி வருகிறது. 2027–28ம் ஆண்டிற்கான 9ம் மற்றும் 11ம் வகுப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் தெரிவு நிலை தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கால வரம்பு வரும் 15ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே தேர்வாளர்கள் www.navodaya.gov.in அல்லது https://cbseitems.rcil.gov.in/nvs ஆகிய இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
