பாகூரில் ரூ. 4 லட்ச மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்
பாகூரில் ரூ. 4 லட்ச மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:08 PM

பாகூர்: பாகூரில் வாகன சோதனையின் போது, 4 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் சப் - இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகூர் துாக்கு பாலம் வழியாக வந்த அசோக் லைலேண்ட் தோஸ்த் வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். சோதனையில், அந்த வேனில், மூட்டை மூட்டையாக, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
டிரைவரிடம் விசாரனை நடத்தியபோது, பாகூர் கூட்டுறவு நகர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் செல்வகுமார் 34; என்பதும், அவர் பெங்களூரில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து, பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு செல்வதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, செல்வக்குமாரை கைது செய்த போலீசார், 4 லட்ச ரூபாய் மதிப்பிலான, 270 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும், லோடு வாகனம், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
