UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:08 PM

புதுச்சேரி: உலக ரேபிஸ் தினத்தையொட்டி கல்லுாரி மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கால்நடை பொது சுகாதாரம் மற்றும் தொற்றுநோயியல் துறை, ரேபிஸ் நோய் கண்டறியும் ஆய்வகம், மாநில சுகாதார இயக்கத்தின் தேசிய ரேபிஸ் கட்டுப்பாட்டு திட்டம் சார்பில், உலக ரேபிஸ் தினம் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது.
போப் ஜான்பால் கல்வியியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியை சுகாதாரத் துறை இயக்குநர் செவ்வேள் துவக்கி வைத்தார். ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிறுவனத்தின் முதல்வர் முருகவேல், போப் ஜான் பால் கல்வியியல் கல்லுாரியின் செயலர் ரிச்சர்ட், தேசிய ரேபிஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் ஹர்ஷ் வர்தன் சர்மா, கல்லுாரி முதல்வர் அலெக்சாண்டர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
ரேபிஸ் விழிப்புணர்வு உரை, ரீல்ஸ் போட்டி, வினாடி வினா போட்டி நடந்தது. இதில் பி.எட். பயிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ரேபிஸ் தடுப்பில் ஒருங்கிணைந்த சுகாதார அணுகுமுறை, விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், முதலுதவி, பாதிப்புக்குப் பிந்தைய தடுப்பு சிகிச்சை ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
ஏற்பாடுகளை கால்நடை பொது சுகாதாரத் துறை தலைவர் பானு ரேகா, பேராசிரியர்கள் அஜய் குமார், நித்யா கேந்துவால் ஆகியோர், முதுநிலை மாணவர்களுடன் இணைந்து ஒருங்கிணைத்தனர்.
