/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆனந்த ரங்கப்பிள்ளை நுாலகத்தில் ஒரே நாடு, ஒரே சந்தா திட்டம் துவக்கம்

ADDED : ஜன 14, 2025 11:30 PM

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் அங்கமான ஆனந்த ரங்கப்பிள்ளை நுாலகத்தில் ஒரே நாடு, ஒரே சந்தா திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
திட்டத்தினை புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர்(பொ) தரணிக்கரசு துவக்கி வைத்தார். கலாசாரம் மற்றும் கலாசார தொடர்புகள் இயக்குனர் கிளமென்ட் எஸ் லுார்து முன்னிலை வகித்தார்.
நிதி அதிகாரி (பொ) டி லாசர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சதானந்த் ஜி சுவாமி, நுாலகர் விஜயகுமார், துணை பதிவாளர் கவுதம் குமாவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனந்த ரங்கபிள்ளை நுாலகத்தில், இத்திட்டம் செயல்படுத்தியதன் மூலம் கல்வி முன்னேற்றத்திற்கும், ஆராய்ச்சியில் இணை சேர்விற்கும் உண்டான பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது.
இத்திட்டமானது புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் ஸ்ரீ விஜயபுரம், மாகி வளாகத்திற்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.