/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ஒரே இந்தியா, உன்னத இந்தியா' விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
'ஒரே இந்தியா, உன்னத இந்தியா' விழிப்புணர்வு நிகழ்ச்சி
'ஒரே இந்தியா, உன்னத இந்தியா' விழிப்புணர்வு நிகழ்ச்சி
'ஒரே இந்தியா, உன்னத இந்தியா' விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஏப் 26, 2025 03:56 AM

பாகூர் : ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில், 'ஒரே இந்தியா உன்னத இந்தியா' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சங்கம் சார்பில், உணவுத் திருவிழா, கைவினை பொருட்கள் பயிற்சி பட்டறை நடந்தது. 'ஒரே இந்தியா உன்னத இந்தியா' திட்டத்தின் கீழ் கேரள மாநிலத்தின் உடை, உணவு, பண்பாடு, கலாசாரம், மொழி நடையை அறிமுகம் செய்தல், கேரள நடனம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஆசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். தலைமையாசிரியர் நான்சி ஏஞ்சலின் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகளில், மாணவ, மாணவிகள் கேரளா மாநிலத்தின் உணவு, உடை, பண்பாடு, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், உடைகள் அணிந்து பங்கேற்றனர். இதில், பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரகுநாதன், செலின், யோகானந்தன், தனவந்தனி, ராஜலட்சுமி, பிரதீபா ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை செல்வி வெர்ஜீனியா நன்றி கூறினார்.

