/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் ஒரே இந்தியா உன்னத இந்தியா நிகழ்ச்சி
/
அரசு பள்ளியில் ஒரே இந்தியா உன்னத இந்தியா நிகழ்ச்சி
அரசு பள்ளியில் ஒரே இந்தியா உன்னத இந்தியா நிகழ்ச்சி
அரசு பள்ளியில் ஒரே இந்தியா உன்னத இந்தியா நிகழ்ச்சி
ADDED : மே 01, 2025 04:45 AM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி அரசு துவக்கப் பள்ளியில், ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் கீதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பள்ளி துணை ஆய்வாளர் அனிதா சிறப்புரையாற்றினார். எஸ்.எம்.சி., தலைவர் ராஜகராஜ் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில், பாரம்பரிய ஆடைகள், உணவு பொருட்கள் மற்றும் நடனங்கள் இடம்பெற்றன.
மேலும், வெவ்வேறு மாநிலங்களில் பேசும் மொழி போட்டி, மாறு வேட போட்டி, வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. போட்டி யில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், நித்யா, மஞ்சுளா, பிரேமா, காயத்திரி, மாரியம்மா, ரேவதி, தமிழரசி, அருணா, கன்னிகா, உமாதேவி உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

