ADDED : ஜூன் 19, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தட்டாஞ்சாவடி, காந்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், 57; மின்துறை ஊழியர். துாக்கமின்மை நோயால் அவதிப்படும் இவர், அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார்.
கடந்த 15ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை வில்லியனுார், கனுாவாபேட், வாட்டர் டேங் பின்புறம் உள்ள சங்கராபரணி ஆற்றில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அவரது மகன் உதய கிருஷ்ணா கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.