ADDED : ஜூன் 04, 2025 01:03 AM
பாகூர் : அரியாங்குப்பத்தில் நடந்த சாலை விபத்தில், கடலுாரை சேர்ந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார் .
கடலுார் புதுக்குப்பத்தை சேர்ந்தவர் பாவாடைராயர்,38; இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் சொந்த வேலையாக புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அரியாங்குப்பம் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி தீடீரென நின்றது. திடுக்கிட்ட பாவாடைராயர், பிரேக் பிடித்து பைக்கை நிறுத்த முயன்றார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த பைக், லாரியின் பின்னால் மோதியது.
இந்த விபத்தில் படுகாயடைந்த பாவாடை ராயரை, கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், பொது மக்கள் உதவியுடன் மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை டாக்டர்கள் பரிசோதத்ததில், ஏற்கனவே இறந்துவிட்டது உறுதியானது.
இது குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.